தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்
“அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் சார்பில்” வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள், வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 25.12.2025 (வியாழக்கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாவட்டம் – ராசிபுரம் வட்டம் – குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில், கட்டணமில்லா விருப்ப மனு விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொண்ட பின், தங்களது சட்டமன்றத் தொகுதி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றின் நகல்களை மனுவுடன் இணைத்து, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தெளிவாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்து, உரிய காலத்திற்குள் தலைமைக் கழக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.